×

21, 24வது வார்டுகளில் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தீவிர பிரசாரம்

திருச்சி, மார்ச் 21: திருச்சி மாநகராட்சி பகுதிகளான 21, 24 வார்டுகளில் திமுக கிழக்கு தொகுதி வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தீவிரமாக வாக்குகள் சேகரித்தார். திருச்சி கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் 24 மற்றும் 21 வது வார்டுக்குட்பட்ட எடத்தெரு, ஆட்டுக்காரத் தெரு, நெய்க்காரத் தெரு, செங்குளம் காலனி, காந்தி மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சென்ற இடங்களில் எல்லாம் பெண்கள் ஆரத்தி எடுத்தும், பட்டாசுகள் வெடித்தும் மேளதாளம் முழங்க வரவேற்பு அளித்தனர். அப்போது காந்தி மார்க்கெட் பழமண்டி காதர் பள்ளிவாசலில் இஸ்லாமியர்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். பின் பள்ளிவாசல் சார்பில் வேட்பாளர் இனிகோ இருதயராஜுக்காக சிறப்பு பிரார்த்தனை செய்தனர். நிகழ்ச்சியில் பாலக்கரை பகுதி செயலாளர் மண்டி சேகர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Inigo Iruthayaraj ,
× RELATED திமுக சார்பில் நீர்மோர் வழங்கல்